search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வானிலை அதிகாரிகள்"

    தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய 6 மாவட்டங்களில் சில இடங்களில் இன்று (புதன்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அதிகபட்சமாக 15 செ.மீ. மழை பெய்துள்ளது. இன்று (புதன்கிழமை) தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும். கடலூர், புதுச்சேரி, கிருஷ்ணகிரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    நேற்று காலை 8.30 மணியுடன் 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    தக்கலை 15 செ.மீ., குழித்துறை 10 செ.மீ., நாகர்கோவில் 8 செ.மீ., இரணியல் 7 செ.மீ., குளச்சல், மயிலாடி தலா 5 செ.மீ., பேச்சிப்பாறை, உளுந்தூர்பேட்டை, செங்கோட்டை, விருத்தாசலம், கன்னியாகுமரி தலா 3 செ.மீ., பூதப்பாண்டி, கொல்லிமலை, தென்காசி தலா 2 செ.மீ., பாபநாசம், அருப்புக்கோட்டை, விருதுநகர், வால்பாறை, சின்னகல்லார், ராசிபுரம், பண்ருட்டி, திருமயம், சிவகங்கை, நெய்வேலி, நடுவட்டம், அறந்தாங்கி, ராதாபுரம், முதுகுளத்தூர் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 
    ×